Today Tamil Cinema News 19-05-2020

Today Tamil Cinema News 19-05-2020
Today Tamil Cinema News 19-05-2020

பொன்மகள் வந்தாள் படத்தின் டிரைலர் வெளியீடு தேதி

ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் பொன்மகள் வந்தாள். இப்படத்தில் ஜோதிகா முதன்முறையாக வக்கீலாக நடித்திருக்கிறார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன், பாக்யராஜ், தியாகராஜன், பாண்டியராஜன் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்து இருக்கிறார்கள்.

இதனிடையே இத்திரைப்படம் வருகின்ற மே மாதம் 29-ஆம் தேதி அமேசான் பிரைம் இல் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வருகின்ற மே மாதம் 21-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர்.

ஆண்ட்ரியாவின் புதிய படத்தின் டீசர் நாளை வெளியாகிறது!

நாஞ்சில் இயக்கத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கும் படம் கா. காட்டுக்குள் நடக்கும் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை தான் மிகவும் எதிர்பார்த்து இருப்பதாக ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கா திரைப் படத்தில் ஆண்ட்ரியா
கா திரைப் படத்தில் ஆண்ட்ரியா

மாஸ்டர் படத்தின் பணிகளைத் துவக்கிய அணிருத்!

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் மாஸ்டர். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில். படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் படம் வெளியாகவில்லை.

இதனிடையே படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தற்போது துவங்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் மாஸ்டர் படத்தின் பின்னணி இசைக்கான வேலையை தற்போது ஆரம்பித்துள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார்.

அனிருத் மற்றும் தளபதி விஜய்
அனிருத் மற்றும் தளபதி விஜய்
Exit mobile version