மாறுபட்ட கதை களங்களைக் கொண்ட படங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்திக். “ரெமோ” படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், கார்த்திக் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை “இரும்புத்திரை”, “ஹீரோ” படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கவுள்ளார். இதனிடையே, இன்று இப்படத்திற்கான பூஜை மிக எளிமையாக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் மிக எளிமையாக நடைபெற்றது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ஜார்ஜ் சி வில்லியம்ஸ், எடிட்டிங் ரூபன். மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.