
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ். இவர் தற்போது கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே அருண் விஜய்யை வைத்து “மாபியா” என்ற படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் தற்போது தனுஷ் அவர்களை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார்.
இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க “மாஸ்டர்” படப் புகழ் மாளவிகா மோகனன் படக்குழு தேர்வு செய்துள்ளார்கள்.
தற்போது இந்த அறிவிப்பை மாளவிகா மோகனன் வீடியோ மூலமாக பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த “ஆடுகளம்” சமீபத்தில் வெளியான “அசுரன்” போன்ற படங்களுக்கு இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Looking forward to have you on the sets of #D43 @MalavikaM_ !#MalavikaJoinsD43 @dhanushkraja @karthicknaren_M @gvprakash pic.twitter.com/UoSY08lGty
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) October 31, 2020