அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிக பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தெறி. படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் இசையில் அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், தெறி படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களையும் யூடியூபில் சுமார் 300 மில்லியன் பார்வையாளர்களை கடன் துள்ளதாக தெறி படத்தின் பாடல்களை வாங்கிய திங்க் மியூசிக் தற்போது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்கள்.