இன்றைய சினிமா செய்திகள் 04-11-2019
தென்னிந்தியாவில் அதிகம் வசூலித்த படங்களில் இரண்டாவது இடம் பிடித்த பிகில்!
தளபதி விஜய் நடிப்பில் பிகில் தீபாவளியன்று வெள்ளித் திரைக்கு வந்தது. பிகில் படத்தைப் பற்றிய கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பிகில் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 10 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், பிகில் படத்தின் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 235 கோடியை வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிகில் படத்துடன் போட்டி போட்டு வெளியான மற்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெறாத காரணத்தால் வட இந்தியாவில் கூட பிகில் வசூலில் அதிக லாபத்தை ஈட்டி வருகிறது.
தொடர்ந்து வசூலில் சாதனை புரிந்து வரும் பிகில் இந்த வார இறுதியில் நிச்சயம் 300 கோடி கிளப்பில் இணையும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகிறார்கள். இந்நிலையில், இந்த வருடத்தில் பிரபாஸ் நடித்த சாஹோ படத்தின் வசூல் தான் தென்னிந்திய படங்களில் அதிகம் வசூலித்த படமாக முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடம் பிகில். தற்போது பிகில் படம் பத்து நாட்கள் வசூலித்த விபரத்தை நாம் பார்ப்போம்
Bigil Box Office Collection 10 days |
Tamilnadu – 120 cr approx |
Kerala – 16.8 cr |
Karnataka – 18.8 cr |
AP/TG – 18.3 cr ROI – 4.8 cr |
Overseas – 85 cr ( estimated ) |
Total gross – 263+ cr |
ஹீரோ படத்தின் முதல் பாடல் வருகின்ற வியாழனன்று வெளியாகிறது!
பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ஹீரோ. இப்படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹீரோ படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்து வருகிறார். ஹீரோ படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோ மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
ஹீரோ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஹீரோ படத்தின் முதல் பாடல் ‘மால்டோ கித்தாப்புலே’ வருகின்ற ஏழாம் தேதி வியாழன் அன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
விஷாலுடன் மோதும் விஜய் சேதுபதி!
தமிழ்சினிமாவில் தற்போது ஒரு திரைப்படம் திரைக்கு வருவது மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெரிய நடிகர்களின் படங்களே குறிப்பிட்ட தேதியில் வெளியாவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.
அந்த வகையில் விஜய் சேதுபதி நடிப்பில் விஜயா புரொடக்ஷன் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாரான படம் தான் சங்கத்தமிழன் கடந்த தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆனால் தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக வெளியானதால் போதிய திரையரங்குகள் சங்கத்தமிழன் படத்திற்கு கிடைக்கவில்லை. இந்த காரணத்தினால் வெளியீட்டு தேதியை தள்ளி போட்டது விஜயா புரொடக்ஷன்.
தற்போது பிகில் திரைப்படம் வெளியாகி 11 நாட்களில் தாண்டிவிட்ட நிலையில் தற்போது தான் சங்கத்தமிழன் படத்திற்கு போதிய திரையரங்கு கிடைத்துள்ளது. இதனால் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் வருகின்ற நவம்பர் மாதம் 15ஆம் தேதி வெள்ளித்திரை காணுகிறது.
விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் தனியாக வரவில்லை அதனுடன் போட்டியாக சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் மிக பிரமாண்ட பொருட்செலவில் ஆக்சன் திரைப்படம் ஆக்சன் வெளியாகிறது.
ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது ஆக்சன் திரைப்படம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதி விஷால் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
துப்பறிவாளன் இரண்டாம் பாகம் தயாராகிறது!
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது.
லண்டனில் 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. துப்பறிவாளன் முதல் பாகத்திற்கு இளையராஜா இசையமைத்தார். தற்போது இரண்டாம் பாகத்திற்கும் இளையராஜா இசையமைக்கிறார்.
துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் புதுமுக நடிகை ஆயிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.