சித்திரம் பேசுதடி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் மிஸ்கின். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சிம்புவை வைத்து ஒரு புது படத்தை மிஸ்கின் இயக்க இருக்கிறாராம். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறாராம்.
மேலும் இப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் மிஸ்கின் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். மறுபுறம் ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO WATCH |