சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த‘. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். படத்தில் ரஜினிகாந்த் அப்பா மகன் என இரு வேடங்களில் நடிக்கிறாராம்.
இப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்பது ஏற்கனவே வெளியான தகவல். இதனிடையே கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
ALSO READ | மாளவிகா மோகனுக்கு பிறந்தநாள் பரிசளித்த மாஸ்டர் படக்குழு
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் ரஜினி மற்றும் நயன்தாரா தம்பதியினருக்கு மகளாக நடிப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.
ALSO READ | விதவிதமான சேலையில் ரசிகர்களை சொக்க வைக்கும் பிக்பாஸ் நடிகை சாக்ஷி அகர்வால்
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சூரி என பெரும் நடிகர் பட்டாளமே நடித்து வருகிறார்கள். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்கள்.
ALSO WATCH |