ரஜினியின் காலா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். அப்படத்தை அடுத்து தல அஜித்தின் விசுவாசம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின்பு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் மூன்றாம் பாகத்தில் கலந்துகொண்டு பிரபலமானார்.
இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாமல் இருப்பதால் சாக்ஷி அகர்வால் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தை பயன்படுத்தும் விதமாக அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
அந்த வகையில் விதவிதமான புடவைகளில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சாக்ஷி அகர்வால் இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை நாம் பார்ப்போம்….