தனுஷின் ‘கர்ணன்’ டைட்டில் போஸ்டர் வெளியானது

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கர்ணன்‘. தனுஷின் 41-வது படமான இதில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார்.

Also Read : விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் அனுஷ்கா!

யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

karnan-title-poster-release
karnan title poster release

Also Watch : Rakita Rakita Rakita Song Video (Lyrical): Jagame Thandhiram Songs | Tamil Kuthu Song

இந்நிலையில், இன்று தனுஷின் பிறந்தநாள் என்பதால் அவரின் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ‘கர்ணன்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்ட்டரில் பல கைகள் ஒன்றாக இணைந்து ஒரு கத்தியை பிடிப்பது போல் இந்த போஸ்டர் உள்ளது. தற்போது இந்த போஸ்ட்டரை பார்த்த தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Also Read : சூர்யாவின் மிரட்டலான தோற்றத்தில் ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

மேலும், இன்று மாலை 5.55 மணிக்கு ‘ராஜ மேளம்’ உருவான விதம் குறித்த ஒரு சிறிய காணொளியும் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version