சூர்யாவின் பிறந்த நாளையொட்டி வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’. இப்படத்தில் சூர்யா மாடுபிடி வீரராக நடிக்கிறார். சி.சு.செல்லப்பா எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக உள்ளது.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘ஆடுகளம்’ ‘அசுரன்‘ போன்ற படங்களும் நாவலை கொண்டு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
‘வாடிவாசல்’ படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு வெற்றிமாறனின் நண்பர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
Also Read | சூர்யா தேவி கைது – வனிதாவை திட்டி வீடியோ பதிவு ஏற்றியதால் நடவடிக்கை
இந்நிலையில், இன்று சூர்யா அவர்களுக்கு 45 ஆவது பிறந்தநாள். இவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ‘வாடிவாசல்’ படக்குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிட்டுள்ளார்கள்.
இந்த போஸ்டரை பார்த்த சூர்யா ரசிகர்கள் நிச்சயம் படம் மாபெரும் வெற்றி பெறும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.