A. L. விஜய் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்சினிமாவில் ஒரு டஜன் படங்களை கையில் வைத்திருப்பவர் விஜய் சேதுபதி. எப்போதும் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக காதல் மற்றும் த்ரில்லரில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
Also Read | சூர்யாவின் மிரட்டலான தோற்றத்தில் ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்க, வெல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி K. கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில், பெயர் வைக்கப்படாத இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக முதல்முறையாக ரசிகர்களால் ஸ்வீட்டி என்று அழைக்கப்படும் அனுஷ்கா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஐசரி K. கணேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Also Read | ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் பிரியாமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
அனுஷ்கா நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ‘நிசப்தம்‘ படத்தில் அனுஷ்கா கண் பார்வையற்றவராக நடித்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன், அஞ்சலி நடிக்கிறார்கள். மூன்று மொழிகளில் தயாராகி வரும் ‘நிசப்தம்’ படம் அமேசான் பிரைம் இல் வெளியாக இருக்கிறது.
விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.