பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய்யின் வாரிசு மூவி டிரெய்லர், ஜனவரி நான்காம் தேதி 5PM வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடி ரிலீஸ் ஆகவுள்ள வாரிசு திரைப்படம் ஒரு குடும்பச் சத்திரம்.
கடந்த ஜனவரி 1ஆம் தேதி வாரிசு திரைப்படத்திற்கான ஆடியோ நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பி அதிக பார்வையாளர்களையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
வாரிசு திரைப்படத்திற்கு போட்டியாக வெளியாக உள்ள துணிவு திரைப்படத்தின் டிரைலர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வெளியாகி அஜித் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.
அதே நாளில் விஜயின் வாரிசு திரைப்பட ட்ரெய்லரும் வெளியாகும் என்று எதிர்பார்ப்பட்ட நிலையில், படக்குழு மௌனம் காத்தது, இந்நிலையில் இன்று படத்திற்கான தரச் சான்றிதழ் “U” பெறப்பட்டது. மேலும் டிரெய்லர் சென்சார் செய்துவிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
விஜயின் வாரிசு திரைப்படம் வரும் ஜனவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.