அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் புரட்சித் தளபதி விஷால் நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் விஷால் ராணுவ உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெஜினா கெஸன்ட்ரா மற்றும் ஷரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார்கள்.
படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம். சக்ரா படத்தை நான்கு மொழிகளில் மிக பிரம்மாண்டமாக விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. இந்நிலையில், சக்ரா படத்தின் டிரைலர் வருகின்ற ஜூன் மாதம் 27-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.