தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவிலுள்ள திரைப்படக் கல்லூரியில் படித்து வருகிறார்.
சினிமாவில் அதிகம் ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய். ஏற்கனவே பல குறும்படங்களை இயக்கியுள்ளார். தந்தையைப் போலவே தானும் சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கனடாவில் கடந்த மூன்று வருடங்களாக திரைப்படக் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில், தனது கல்லூரி நண்பர்களுடன் விஜய் மகன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.