மாஸ்டர் படத்தின் தெலுங்கு உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கிய நிறுவனம்!

மாஸ்டர் படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல நிறுவனம் East Coast Productions சுமார் 10 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

master-000

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான படங்கள் தமிழகத்தை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அனைத்து மாநிலங்களையும் வசூலில் ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

இந்நிலையில், தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்த நிலையில் மாஸ்டர் படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல நிறுவனம் East Coast Productions சுமார் 10 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. மாஸ்டர் படம் இந்த விலைக்கு போக ஒரு மிக முக்கிய காரணம் கடைசியாக வெளியான விஜயின் பிகில் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சுமார் 20 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version