
நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக “போடா போடி” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி.
அதன்பின்பு தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான சர்க்கார் படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில் இவர் “டேனி” என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தது அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில், வரலட்சுமி முதல்முறையாக கண்ணாமூச்சி என்ற படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இப்படத்தை “மெர்சல்” படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது.
இதனிடையே “கண்ணாமூச்சி” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளார்கள். அந்த போஸ்டரில் வரலட்சுமியின் கண்களை யாரோ மூடியிருப்பது போல் அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Also Read | சிம்பு பாடலை டைட்டிலாக தேர்ந்தெடுத்த ஹரிஷ் கல்யாண்
இதை வைத்து பார்க்கும் பொழுது பெண்களுக்கு எதிராக சமூகத்தில் ஏற்படும் அநீதிகளுக்கு ஒரு தீர்வாக இத்திரைப்படம் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய இந்த போஸ்டரை பார்த்து பல திரை பிரபலங்கள் டுவிட்டர் மற்றும் பேஸ்புக் மூலமாக வரலட்சுமி சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.