‘வாத்தி கம்மிங்’ பாடல் யூடியூப்பில் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது

vaathi coming song reached 60 million views on youtube

விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி என்று ரசிகர்களால் பெரிதும் அழைக்கப்படுபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

vaathi coming song reached 60 million views on youtube
vaathi coming song reached 60 million views on youtube

தற்போது நாடு முழுவதும் கொரோனா என்ற நோய் தாக்கத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் பல வணிக வளாகங்கள் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதில் பல சிக்கல்கள் நீடித்து வருகிறது.

இதனிடையே, மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்‘ என்ற பாடல் யூடியூப்பில் சுமார் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் கலக்கி வருகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் மாளவிகா மோகனன் நடிக்கிறார்கள். மேலும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாந்தனு பாக்யராஜ் நடிக்கிறார்கள்.

Exit mobile version