உலகநாயகன் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத அடைமொழி ஆம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நடிகரின் நடிப்பிற்கு மட்டுமே படம் பார்க்க ரசிகர்கள் வந்தால் அது வேறு யாருமில்லை நம் உலக நாயகன் கமலஹாசன் அவர்களே சாரும்.
இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளது. சமீபகாலமாக சமுதாயத்தொண்டு ஆற்ற திரையுலகிலிருந்து அரசியலில் குதித்துள்ளார்.

இந்நிலையில், கமல்ஹாசன் தனது அடுத்த படத்தை ‘கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு ‘எவனென்று நினைத்தாய்’ என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.
தற்போது அந்த டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்கள்.
Another journey begins.
மறுபடியும் உங்கள் நான்.@RKFI @Dir_Lokesh @anirudhofficial pic.twitter.com/ABMwrb45Qa
— Kamal Haasan (@ikamalhaasan) September 16, 2020