Tamil Cinema News
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு கோப்ரா!
டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்திற்கு கோப்ரா என பெயர் வைத்துள்ளார்கள். கோப்ரா படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
கோப்ரா படத்தை Seven ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமார் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார். இந்நிலையில் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
பட்டாசு படத்தின் ஜிகிடி கில்லாடி பாடல் வெளியானது!
துரை செந்தில்குமார் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் தனுஷ் நடிக்கும் படம் பட்டாசு. படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படம் பொங்கல் வெளியீடாக வெளியாகிறது. இந்நிலையில், பட்டாசு படத்தில் அனிருத் பாடிய ஜிகிடி கில்லாடி பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷிற்கு ரஜினிகாந்த் பாராட்டு!
மறைந்த நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. அந்த படத்தில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். இதன் காரணமாக கீர்த்தி சுரேஷிற்கு இந்திய அரசு தேசிய விருது நேற்று வழங்கியது.
இந்நிலையில், தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேசை சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். தற்போது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிறது.
டுவிட்டரில் இணைந்த லட்சுமி மேனன்!
சசி குமாருக்கு ஜோடியாக சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லட்சுமிமேனன். அதன் பின்பு விக்ரம் பிரபுக்கு ஜோடியாக கும்கி படம் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தார் லட்சுமி மேனன். பின்னர் வெளியான படங்கள் அனைத்துமே போதிய வெற்றியை பெறவில்லை. கடைசியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரெக்க படத்தில் நடித்தார். இந்நிலையில், லட்சுமிமேனனுக்கு ஃபேஸ்புக்கில் மட்டுமே அக்கவுண்ட் இருந்தது. தற்போது, டுவிட்டரிலும் புதிய அக்கவுண்ட் ஒன்றை ஓபன் செய்து உள்ளார்.
Hi everyone How are you ,,, its Lakshmi Menon here | This is My Official Twitter id Thank You @itslakshmimenon @digitallynow pic.twitter.com/eYnQKQMv98
— Lakshmi menon (@itslakshmimenon) December 25, 2019
குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சமந்தா!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வசூலில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சமந்தா நடிப்பு துறையில் மட்டும் தனது கவனத்தைச் செலுத்தாமல் பொது வாழ்விலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். குறிப்பாக அனாதை குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்ட சமந்தா இன்று கிறிஸ்துமஸ் விழாவை பிரத்யுஷா அறக்கட்டளை குழந்தைகளுடன் சமந்தா இன்று கொண்டாடினார்.
தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது: