பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி தந்த தமிழக அரசு!
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் வரும் வெள்ளியன்று மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் மிக பிரமாண்டமாக வெளியாகிறது பிகில்.
டிக்கெட் முன்பதிவில் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் என தொடர்ந்து நான்கு நாட்களும் ஹவுஸ்புல்லாக புக்கிங் செய்து வருகிறார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்.
இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சில சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆனால், சிறப்பு காட்சிக்கு அனுமதி தரவில்லை என்று தமிழக அரசு உத்தரவு போட்டுள்ளது. இந்நிலையில், பிகில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் இன்று அமைச்சர் கடம்பூர் ராஜு போய் சந்தித்து தங்களது கோரிக்கையை வைத்தார்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கடம்பூர் ராஜு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளார். இதனால் தளபதி விஜய் நடித்த பிகில் படத்தின் சிறப்பு காட்சிகளை ரசிகர்கள் காலை 4 மணி, 6 மணி என சிறப்பு நேரத்தில் தளபதி விஜயின் தரிசனத்தைக் காணலாம்.
#PodraVediya! Special shows permission granted, shows to start from 4AM!! #Bigil #BigilDiwali
— Thusi (@thusi_c) October 23, 2019
ஹீரோ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது!
இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ஹீரோ. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்துவருகிறார்.
ஹீரோ படத்தில் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகிறது. இந்த டீசரை பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்.
அட்லீயிடம் கேள்விகள் கேட்க புலிங்க ரெடியா!
உலகமே மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பிகில் திரைப்படத்தின் இயக்குனர் அட்லி நாளை மாலை 6 மணிக்கு ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாட உள்ளார். இந்த சந்திப்பை அதிகாரப்பூர்வமாக ஏ ஜி எஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்கள். அட்லீயிடம் கேள்விகள் கேட்க விஜய் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளார்கள்.
தபாங் 3 படத்தின் டிரைலர் வெளியானது!
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது தபாங் 3. இப்படத்தில் சல்மான் கான் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் தமிழ் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தபாங் 3 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.