அஜித் பிறந்தநாளில் ஜெயம்ரவி படம் வெளியாகிறது!
கோமாளி படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி நடிக்கும் படம் பூமி. படத்தில் ஜெயம்ரவி ஏழை விவசாயியாக நடிக்கிறார். பூமி படம் ஜெயம் ரவிக்கு 25வது படம் என்பதால் படத்தில் மிகுந்த கவனம் செலுத்திவரும் ஜெயம் ரவி ஒவ்வொரு காட்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறாராம்.
படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். ரோமியோ ஜூலியட், போகன், படங்களை இயக்கிய லட்சுமணன் பூமி படத்தை இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் மாட்டுப்பொங்கலன்று செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அந்த போஸ்டரில் ஜெயம் ரவி மற்றும் நிதி அகர்வால் பைக்கில் அமர்ந்திருப்பது போன்றும் நிதி அகர்வால் ஜெயம் ரவியின் காதை கிள்ளுவது போன்றும் அந்த போஸ்டர் உள்ளது. மேலும் படம் தல அஜித் குமாரின் பிறந்த நாளான மே 1-ம் தேதி பூமி படம் வெளியாகும் என்று அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளார்கள்.
நாக சைதன்யாவுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி!
பிரேமம் படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சாய்பல்லவி. அதன் பின்பு அவர் நடித்த படங்கள் அனைத்துமே வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா ஜோடியாக லவ் ஸ்டோரி என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் சாய் பல்லவி. தற்போது அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பட்டாசு படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியானது
கொடி படத்தின் வெற்றிக்கு பிறகு துரை செந்தில்குமார் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பட்டாசு. படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், படம் நேற்று பொங்கலுக்கு வெளியான நிலையில். படத்தின் முதல்நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
பட்டாசு படம் தமிழகம் முழுவதும் முதல் நாள் சுமார் 6 கோடியே 50 லட்சம் வசூல் செய்துள்ளது. மேலும் தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் படம் நிச்சயம் வசூலில் ஒரு புதிய சாதனையைப் படைக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பேசி வருகிறார்கள்.
காதலர் தின வார இறுதி- பிப்ரவரி 14 அன்று கதாநாயகி திரைக்கு வந்ததால் # அன்வர் ரஷீத் இயக்கிய # நஸ்ரியாவுடன் # ஃபஹத்ஃபாசிலின் # டிரான்ஸ் தயாரிப்பதில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.
ஃபஹத் பாசில், நஸ்ரியா நாஜிம் நடிப்பில் உருவாகியுள்ள டிரான்ஸ் படம் வெளியாகும் தேதி!
மலையாள சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் ஃபஹத் பாசில். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடித்தார். இந்நிலையில், தனது கனவு படமான டிரான்ஸ் படத்தில் தனது காதல் மனைவி நஸ்ரியா நாஜிம் உடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தை அன்வர் ரஷீத் தயாரித்து இயக்கி வருகிறார். மலையாள திரையுலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 14-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது.