நான் தந்தை ஆகி விட்டேன் மகிழ்ச்சியில் நகுல்
பாய்ஸ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நகுல். அதன் பிறகு எந்த பட வாய்ப்பும் இன்றி இருந்த நகுலுக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியாயின.
அந்த படங்கள் காதலில் விழுந்து மற்றும் மாசிலாமணி இந்த இரு திரைப்படங்களும் நகுலுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அதன் பின்பு அவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகின.
இந்நிலையில், நகுல் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அது என்ன செய்தி என்றால் இந்த வருடம் எனது பிறந்தநாள் மற்றும் எனது மனைவி கர்ப்பம் தரித்துள்ளார் ஆக இந்த வருடம் எனக்கு சிறப்பான வருடம் என்று மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். நகுல் தந்தையான செய்தியை அறிந்த சினிமா கலைஞர்கள் நகுலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கவின் பிறந்தநாளுக்கு காமன் மேன் டிபி வெளியிட்ட ரசிகர்கள்!
விஜய் டிவி சீரியல்களில் கதாநாயகனாக நடித்து கவின். பின் அந்த தொலைக்காட்சியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நபராக மாறினார். அவருக்கென்று தனியான ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியது.
இந்நிலையில், கவின் இன் பிறந்தநாள் வருகின்ற ஜூன் 22-ஆம் தேதி வருவதால் அவரது பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் இப்பொழுது காமன் மேன் டிபி ஒன்றை உருவாக்கி இணைய தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த டிபிஐ பார்த்த சினிமா பிரபலங்கள் ஒரு சாதாரண டிவி நடிகருக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டமா என்று மிரண்டு வருகிறார்கள்.