இன்றைய சினிமா செய்திகள் 07-11-2019
பரமக்குடியில் பிறந்தநாளை கொண்டாடிய கமல்ஹாசன்!
உலகநாயகன் கமலஹாசன் தனது 65-வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடன் பரமக்குடியில் கொண்டாடினார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கமலஹாசன். களத்தூர் கண்ணம்மா என்னும் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன் கடைசியாக வெளியான விஸ்வரூபம் 2 வரை தனது நடிப்பு பரிமாணத்தில் உச்சத்தில் உள்ளார்.
தமிழ் சினிமா வேறு கமல்ஹாசன் வேறு என்று சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் கமலஹாசனின் பங்கு அதிகம். குறிப்பாக, கமல்ஹாசன் எழுதி இயக்கிய மைக்கேல் மதன காமராஜன், தேவர்மகன், குருதிப்புனல், ஹேராம், விஸ்வரூபம், போன்ற படங்கள் மைல்கல்லாக அமைந்தது.
பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆன கமலஹாசன் இன்று தனது 65-வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் பரமக்குடியில் இன்று கொண்டாடினார்.
சல்மான்கான் படத்தில் பாரத்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் பிரபுதேவா இயக்கத்தில் தபாங் 3 படத்தில் நடித்து வருகிறார். தபாங் 3 சல்மான் கானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். இந்நிலையில், தபாங் 3 கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் மாதம் வெளியாகிறது.
இதனிடையே சல்மான்கானும் பிரபுதேவாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார்கள் அந்த படத்திற்கு ராதே என்று பெயர் வைத்துள்ளார்கள். தற்போது, அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பரத் தேர்ந்தெடுத்திருக்கிறார் பிரபுதேவா. தற்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் பரத் சல்மான்கானுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த நிசப்தம் டீஸர்!
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்கப்படுபவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பாகுபலி இரண்டாம்பாகம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பின்பு சிறிது காலம் நடிப்பிற்கு ஓய்வு அளித்து வந்த அனுஷ்கா தற்போது, மாதவனுக்கு ஜோடியாக நிசப்தம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நிசப்தம் படத்தில் அனுஷ்கா வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.