கோலாகலமாக நடந்த நடிகர் மகத் திருமணம்!
மங்காத்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர் மகத். அதன்பின்பு தளபதி விஜய்யின் ஜில்லா படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் இரண்டாம் பாகத்தில் கலந்துகொண்டு பிரபலமானார். தற்போது இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது நீண்ட நாள் தோழியான பிராச்சி மிஸ்ரா இன்று மகத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் அனிருத் மற்றும் சிம்பு கலந்து கொண்டார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

மாப்பிள்ளை அவதாரம் எடுத்த யோகி பாபு!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருக்கும் நடிகர் யோகிபாபு. விஜய், அஜித், ரஜனி, சிவகார்த்திகேயன், தனுஷ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் காமெடி செய்து கலக்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் யோகி பாபு விரைவில் திருமணம் நடைபெறும் அப்போது திருமணத்திற்கு நீங்கள் சென்று தாலி கட்டி விடுங்கள் என்று காமெடியாக கூறியிருந்தார் தற்போது விஜய் அவர்களின் வாக்கு இன்று உண்மையாகியுள்ளது. ஆம் யோகி பாபு அவர்களுக்கு இன்று தனது சொந்த ஊரில் திருமணம் நடைபெற்று உள்ளது. தற்போது திருமணக்கோலத்தில் யோகிபாபு இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
