ToDay Tamil Cinema News 03-12-2019
தனுசு ராசி நேயர்களே படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது!
ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்து வரும் படத்திற்கு தனுசு ராசி நேயர்களே என்று பெயர் வைத்துள்ளார்கள். புதுமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் ஒரு ஜோதிடத்தை நம்பும் நபராக நடித்திருக்கிறார்.
ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ரெபா மோனிகா நடிக்கிறார். தனுசு ராசி நேயர்களே படத்தில் ஒரு பாடலை அனிருத் பாடியிருக்கிறார். இந்நிலையில், தனுசு ராசி நேயர்களே படத்திற்கு தணிக்கை குழு யு/ ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வருகிற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகிறது.
அமெரிக்காவில் அதிக வசூலை ஈட்டிய தனுஷ் படம்!
தனுஷ் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் இப்படம் அமெரிக்காவில் ரூ 56 லட்சம் வசூல் செய்து சாதனை செய்துள்ளது.
டாக்டர் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் தற்போது பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஒரு புதிய படத்தில் சிவகார்த்திகேயன் டாக்டராக நடிக்கிறார்.
படத்திற்கு டாக்டர் என்று பெயர் வைத்துள்ளார்கள். படத்தை சிவகார்த்திகேயனுடன், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. டாக்டர் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்குகிறது.
Very happy to share that my next film will be with my dearmost friends @Nelson_director & @anirudhofficial titled as #DOCTOR ?⚕?? Once again happy to be associated with @kjr_studios ? Shoot starts soon? @SKProdOffl pic.twitter.com/W82ltJrbHK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 2, 2019