இன்றைய சினிமா செய்திகள் (01-11-2019)
ஜெயம்ரவியின் 25 வது படம் பூமி!
கோமாளி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி பூமி என்கின்ற படத்தில் நடிக்கிறார். பூமி படத்தில் ஜெயம் ரவி ஏழை விவசாயியாக நடிக்கிறார்.
இப்படத்தை லட்சுமணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி வைத்து ரோமியோ ஜூலியட், போகன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். சதீஷ் நண்பர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இமான் இசையமத்துள்ளார்.
பூமி ஜெயம் ரவிக்கு 25-வது படமாகும். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
வில்லனாக புது அவதாரம் எடுக்கும் வெங்கட்பிரபு!
வைபவ் நடிக்கும் புது படத்திற்கு ’லாக்கப்’ என்று பெயர் வைத்துள்ளார்கள். வெங்கட்பிரபு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
’லாக்கப்’ படத்தை நிதின் சத்யா தயாரிக்கிறார். ஜெயம் ராஜாவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஜி.சார்லஸ் இந்த புதிய படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
வைபவ், வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி, வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வெங்கட்பிரபு முதன்முறையாக வில்லனாக நடிக்கிறார்.
கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு ‘லாக்கப்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.