சர்ச்சையை ஏற்படுத்திய மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர்!

கையில் மது பாட்டிலுடன் கெத்தாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் கடலூர் அருகே உள்ள என்.எல்.சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.

இதனிடையே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. தளபதி விஜய் படப்பிடிப்பில் இருந்து அவசர அவசரமாக அவர் சொந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று வருமானவரித் துறையினர் இரண்டு நாட்களாக விசாரித்தார்கள்.

இந்நிலையில், மாஸ்டர் படத்தின் முதல் பாடல் ஒரு குட்டி கதை என்ற பாடல் வருகின்ற வெள்ளிக்கிழமை அதாவது காதலர் தினத்தன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பில் தளபதி விஜய் இருக்கும் புகைப்படத்தையும் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள்.

தற்போது அந்த புகைப்படத்தில் தளபதி விஜய் கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு காதில் ஹெட் செட் மாட்டி கொண்டு பாடல் கேட்டுக் கொண்டு ஒரு கையில் மது பாட்டில் வைத்திருப்பது போன்று அந்த புகைப்படம் உள்ளது.

தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த சில அரசியல் தலைவர்கள் தளபதி விஜய் ஒரு பெரும் ரசிகர் பட்டாளங்களை வைத்திருக்கும் நபர் குறிப்பாக சிறு குழந்தைகளை ரசிகராக கொண்ட ஒரு நபர் இது போன்ற மது பாட்டிலை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படங்களை எவ்வாறு வெளியிடலாம் என்று தளபதி விஜய் மீது குற்றம் சாட்டி உள்ளார்கள். இந்த பிரச்சனை விஜய் ரசிகர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அரசியல் தலைவருக்கு எதிராக சில கிண்டல்களையும் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

master
master
Exit mobile version