வெற்றிமாறன், சூர்யா படத்தின் தலைப்பு “வாடிவாசல்”

சூர்யாவின் அடுத்த படத்திற்கு வாடிவாசல் என்று டைட்டில் வைத்துள்ளார்கள்.

சுதா கொங்கரா இயக்கத்தில் “சூரரைப் போற்று” படத்தில் நடித்து வரும் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ். தாணு மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்க உள்ள நிலையில் படத்தின் தலைப்பு என்ன என்று பலரும் யோசித்து வந்த நிலையில்.

Vaadi-Vaasal-00

நேற்று நடந்த விகடன் விருது விழாவில் தொகுப்பாளர்கள் வெற்றி மாறனிடம் சூர்யாவை வைத்து நீங்க இயக்கும் படத்தின் தலைப்பு என்ன என்று கேட்டதற்கு “வாடிவாசல்” என்று பதிலளித்துள்ளார்.
ஏற்கனவே “ஆடுகளம்” படத்தில் சேவல் சண்டையை மையமாக வைத்து தெறிக்கவிட்ட வெற்றிமாறன்,
“வாடிவாசல்” படத்தில் ஜல்லிக்கட்டை கதையாகக் கொண்டு படமாக உள்ளாராம்.

Exit mobile version