உடல் எடையை குறைத்த அரண்மனை நாயகி

poonam bajwa reduced weight

poonam bajwa reduced weight

ஹரி இயக்கத்தில் பரத்துக்கு ஜோடியாக சேவல் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.

அதன்பின்பு ஜீவாவுக்கு ஜோடியாக தெனாவட்டு, கச்சேரி என தொடர்ந்து வெற்றிப்படங்களை நடித்தார். கடைசியாக சுந்தர்.சி ஜோடியாக முத்தின கத்திரிக்கா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் இந்த காலகட்டத்தை சிறப்பாக பயன்படுத்தி கொண்ட பூனம் பாஜ்வா தனது உடல் எடையை குறைத்து தற்போது மெலிந்த உடலுடன் காணப்படும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் இந்த உடல்வாகும் உங்களுக்கு அழகாக இருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Poonam Bajwa
Poonam Bajwa
Poonam Bajwa
Poonam Bajwa
Exit mobile version