Penguin Movie Review [6/10] | பென்குயின் திரை விமர்சனம் [3/5]

penguin-movie-review_live_cinema_news

பென்குயின் திரை விமர்சனம்

ஜோதிகா நடிப்பில் கடந்த மாதம் வெளியான பொன்மகள் வந்தாள் படத்திற்கு பிறகு (OTTயில் வெளியாகும்) அமேசான் பிரைம் இல் வெளியாகும் இரண்டாவது தமிழ் திரைப்படம் பென்குயின்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷின் அசத்தலான நடிப்பில் உருவாகியுள்ள இந்த பென்குயின் படத்தை பற்றிய திரை விமர்சனத்தை இந்த கட்டுரையில் காண்போம்

Penguin Trailer

நடிகர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள்

நடிப்பு – கீர்த்தி சுரேஷ்
இயக்கம் – ஈஷ்வர் கார்த்திக்
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – கார்த்திக் ஃபலானி
தயாரிப்பு – ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்
படம் வெளியான தேதி – 19 ஜூன் 2020
நேரம் – 2 மணி 10 நிமிடம்
ரேட்டிங் – 3/5

கதை

கீர்த்தி சுரேஷ் தனது இரண்டு வயது குழந்தையை தொலைத்துவிட்டு பின்பு தன் குழந்தையை எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதே படத்தின் கதை.

Keerthi_Suresh_in _Penguin_movie_image
Keerthi Suresh in Penguin movie image

பென்குயின் படத்தின் நிறைகள்

நிறைமாத கர்ப்பிணியாக தனது நடிப்பில் அனைவரையும் சொக்க வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். ஒரு நல்ல மனைவி ஒரு சிறந்த தாய் என தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது முகபாவங்களை காட்டி பாராட்டைப் பெறுகிறார் கீர்த்தி சுரேஷ்.

தனது பிள்ளையை இழந்து தேடி பிறகு கண்டுபிடித்தவுடன் தனது மகன் தன்னிடம் பேச மாட்டேங்கிறான் என்று மனவேதனையில் உருகும் பொழுதும் கூட தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். படத்திற்கு பக்கபலமாக கீர்த்தி சுரேஷின் நடிப்பு இருக்கிறது.

Also seeஇரண்டு வருடமாக நடிக்காதது ஏன் : கீர்த்தி சுரேஷ்!

Penguin_movie_screenshot
Penguin movie screenshot

பென்குயின் படத்தில் இன்னொரு சிறப்புமிக்க விஷயம் என்னவென்றால் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை அடுத்தது என்ன என்று விருப்பாக செல்வதே படத்தின் சுவாசத்திற்கு மிக முக்கிய காரணம்.

குறிப்பாக வில்லனிடம் கீர்த்தி சுரேஷ் உரையாடும் அந்த உரையாடல் படத்திற்கு பலத்தைக் கூட்டுகிறது. ஒருகட்டத்தில் தனது பிள்ளையை எதற்காக கடத்தினார்கள் என்று தெரிவதற்காக கீர்த்தி சுரேஷ் முயற்சிக்கும் அனைத்து காட்சிகளுமே கைதட்டல் பெறுகிறது. படத்திற்கு ஒளிப்பதிவு மிகப்பெரிய பலமாக இருக்கிறது.

பென்குயின் படத்தின் குறைகள்

படத்தின் மிகப்பெரிய மைனஸ் கீர்த்தி சுரேஷின் மறுமணம் என்று சொல்லலாம். அதாவது தனது குழந்தையை எப்படியும் கண்டுபிடித்து விடுவேன் என்று மிகவும் துணிச்சலாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் ஏன் மறுமணம் செய்கிறார் என்று தெரியவில்லை அது அவரின் கதாபாத்திரத்திற்கு பொருந்தாத ஒரு செயலாகத் தெரிகிறது.

Keerthi_Suresh_in_Penguin_Movie
Keerthi Suresh in Penguin Movie

மேலும் கீர்த்தி சுரேஷின் தோழிகளாக வரும் இருவரும் கீர்த்தி சுரேஷுக்கு சற்றும் பொருந்தாத நபர்களாக தெரிகிறார்கள். மேலும் படத்திற்கு பின்னணி இசை சிறப்பாக இருந்தாலும் ராட்சசன் படத்தில் ஏற்படும் ஒரு பீதி இந்தப் படத்தில் இல்லை இசையில் கோட்டை விட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். மேலும் படத்தின் கிளைமாக்ஸ் பென்குயின் திரைப்படம் ஒரு ஹாலிவுட் தரத்தில் படம் சென்று கொண்டிருக்கும் நிலையில் படத்தின் கிளைமேக்ஸ் இது தமிழ் பட என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Penguin movie watch online tamil

The Review

பென்குயின்

3 Score

மொத்தத்தில் பென்குயின் கீர்த்தி சுரேஷின் அசத்தலா நடிப்பிற்கு தீனி போடும் ஒரு திரைப்படம் என்று சொல்லலாம்

PROS

  • கீர்த்தி சுரேஷின் நடிப்பு
  • ஒளிப்பதிவு
  • சிறுவனாக நடித்திருக்கும் குழந்தை
  • படத்தின் பின்னணி இசை

CONS

  • படத்தின் நீளம்
  • படத்தின் கிளைமாக்ஸ்
  • கீர்த்தி சுரேஷ் மறுமணம் செய்து கொள்வது
  • தேவையில்லாத கதாபாத்திரங்கள்

Review Breakdown

  • Penguine Rating
Exit mobile version