Rating 3.5/5
இன்றைய திரை விமர்சனம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார்
நடிகர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள்
நடிப்பு – ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி.
இயக்கம் – ஏ ஆர் முருகதாஸ்
இசை – அனிருத்
ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
தயாரிப்பு – லைகா புரொடக்ஷன் சுபாஸ்கரன்
படம் வெளியான தேதி – 9 ஜனவரி 2020
நேரம் – 2 மணி 40 நிமிடம்
ரேட்டிங் – 3.5/5
கதை : கடமை கட்டுப்பாடு என்று ஒரே நேர்கோட்டில் செல்லும் போலீஸ் அதிகாரி சந்திக்கும் சவால்கள் படத்தின் கதை.
தர்பார் படத்தின் நிறைகள் : படத்தில் ரஜினிகாந்த் மும்பை போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ரஜினி காந்தின் போலீஸ் அதிகாரி தோற்றம் அவருக்கு மிக கச்சிதமாக பொருந்தி உள்ளது. பழைய படங்களில் ரஜினிகாந்த் நடித்த போலீஸ் அதிகாரி வேடங்களை போல இந்த படத்தில் இல்லை என்றாலும் தற்போது உள்ள சினிமா பார்க்கும் இளைஞர்களுக்கு பிடித்த போலீஸ் அதிகாரி ஆகவே ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். படத்தில் ரஜினியுடன் யோகிபாபு வரும் காட்சிகள் கைத்தட்ட வைக்கிறது. குறிப்பாக நயன்தாராவுடன் ரஜினியை சேர்க்க நிவேதா தாமஸும் யோகிபாபு போடும் பிளான்கள் அனைத்துமே ரசிக்கும் படியாக உள்ளது. ரஜினியின் மகளாக நடித்துள்ள நிவேதா தாமஸ் படத்திற்கு பெரும் பலமாக உள்ளார். பாடல்கள் படத்தில் பெரிதும் எடுபடவில்லை என்றாலும் சும்மா கிழி பாடல் மட்டுமே கேட்கும் படியாக உள்ளது.
தர்பார் படத்தின் குறைகள் : தர்பார் படத்தின் மிகப்பெரிய குறை படத்தின் வில்லன் சுனில் ஷெட்டி தான். ரஜினி போன்ற பெரும் நட்சத்திரத்திற்கு எதிராக செயல்படும் வில்லன் மிகவும் கம்பீரமாகவும் தெளிவாகவும் போடும் திட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால், சுனில் ஷெட்டி படத்தில் ஒரு வெத்து வில்லனாகவே நடித்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் வட இந்தியாவிலிருந்து வில்லன்களை இறக்கி கொண்டு வருவதால் வில்லன்களுக்கு பெரிதும் மவுஸ் இல்லாமல் போய் வருகிறது. அது இந்த படத்திலும் நிகழ்ந்துள்ளது. மேலும் படத்தில் இன்னொரு குறை படத்தின் கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் முதல் பாதி சற்று வேகமாக செல்கிறது இரண்டாம் பாதி மெதுவாக செல்கிறது.
The Review
தர்பார்
மொத்தத்தில் ரஜினி படமா, முருகதாஸ் படமா என்று தெரியவில்லை? ஆனால், தர்பார் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு ஏற்ற படம்.
PROS
- ரஜினியின் நடிப்பு
- யோகி பாபு நகைச்சுவை
- நிவேதா தாமஸ்
- சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு
CONS
- படத்தின் நீளம்
- திரைக்கதை
- இசை
- வில்லன்
Review Breakdown
-
ரஜினி நடிப்பு
-
இசை
-
ஒளிப்பதிவு
-
இயக்கம்