மீண்டும் பாலிவுட் படத்தில் நடிக்கும் தனுஷ்!

தனுஷ், அக்‌ஷய்குமார் நடிக்கும் இந்திப் படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக இன்று வெளியாகியுள்ளது.

பட்டாசு வெற்றிக்குப் பிறகு தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். நடிகர் தனுஷ் பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தனுஷை வைத்து ராஞ்சனா என்ற படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராய் மீண்டும் தனுஷை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்துக்கு அட்ரங்கி ரே என்று பெயர் வைத்துள்ளார்கள்.

படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்க உள்ளதாகவும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்‌ஷய்குமார் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம்.

தற்போது இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக தனுஷ், அக்ஷய்குமார், சாரா அலி கான் மூவரும் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தப் படத்துக்கு ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை பூஷன்குமார் தயாரிக்கிறார். ஷூட்டிங் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி தொடங்குகிறது.

AtrangiRe
AtrangiRe
Exit mobile version