அசுரத்தனமாக வட இந்தியாவையும் வேட்டையாடும் விஜய்

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இப்ப வட இந்தியாவிலும் தளபதி கில்லி டா!

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிகில் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் பிகில் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது. அந்த வகையில் முதல் நாள் இப்படம் ரூ 63 கோடி வரை வசூல் செய்திருந்தது.

தற்போது, இரண்டு நாள் முடிவில் இப்படம் ரூ 100 முதல் ரூ 125 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்காவில் பிகில் பிரீமியர் காட்சியில் மட்டும் 3.5 லட்சம் டாலர் தாண்டியுள்ளதாம். இதன் மூலம் பேட்ட படத்திற்கு பிறகு அமெரிக்காவில் பெரிய ஓப்பனிங் கிடைத்தது இப்படத்திற்கு தானாம்.

இது ஒருபுறமிருக்க மும்பையில் பிகில் அதிக வசூலை ஈட்டி வருகிறது. அங்கு சூப்பர் ஹீரோ அக்ஷய் குமார் நடிப்பில் ஹவுஸ்புல் நான்காம் பாகம் வெளியாகி உள்ளது அந்த படத்தை காட்டிலும் திகில் படத்திற்கு மும்பையில் உள்ள ரசிகர்கள் அதிகம் சென்று வருவதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகிறார்கள்.

Bigil-vijay-0000

Exit mobile version