புல்லட் பைக் ஓட்ட தெரியாமல் ஓட்டி கீழே விழுந்து பாராட்டை பெற்ற ஷ்ரத்தா ஸ்ரீநாத்

Actress Shraddha Srinath Falls Of Her Bike, Shares Video With Her Fans

Actress Shraddha Srinath Falls Of Her Bike, Shares Video With Her Fans

யு டர்ன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பின்பு தல அஜித் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தில் மூன்று பெண்களில் ஒருவராக நடித்தார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது விஷாலுக்கு ஜோடியாக சக்ரா படத்தில் கதாநாயகன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பெரும்பாலும் நடிகைகள் தங்களின் சந்தோஷமான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் இந்த காலகட்டத்தில் பைக் ஓட்ட தெரியாமல் கீழே விழுந்து அடிபட்ட தனது வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அனைத்து நடிகைகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்கள் துணிச்சல் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

Exit mobile version