டகால்டி படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் ஆர். கண்ணன் இயக்கத்தில் பிஸ்கோத் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
இதனிடையே, அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். மேலும் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறார்கள்.
டிக்கிலோனா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். டிக்கிலோனா படத்தை மிக பிரம்மாண்டமாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டாபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்தனர். அதன்படி வெளியான இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.