பிரபாஸ்க்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனேக்கு இத்தனை கோடி சம்பளமா

ஷாருக் கானுக்கு ஜோடியாக ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலமாக இந்தி திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் தீபிகா படுகோன்.

அப்படத்தில் சாந்தி கதாபாத்திரத்தில் மிக கச்சிதமாக பொருந்தும் வகையில் நடித்த தீபிகா படுகோன் அப்படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் சூப்பர்ஸ்டார் கதாநாயகியாக உருவெடுத்தார்.

அதன்பின்பு வெளியான ரேஸ், சென்னை எக்ஸ்பிரஸ், ராம்லீலா, பஜிரோ மஸ்தானி, பத்மாவத், போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

Also Read | டூ பீஸ் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நடிகை!

இதனையடுத்து ஹாலிவுட் திரைப்படமான ட்ரிபிள் எக்ஸ் ரிட்டர்ன் என்ற என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

பத்மாவத் படத்தில் நடித்ததன் மூலம் ரன்வீர் சிங்கின் மீது ஏற்பட்ட காதலால் அவரை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

deepika padukone wallpaper
deepika padukone wallpaper

தற்போது அவருக்கு ஜோடியாக கபில் தேவின் வாழ்க்கை வரலாறு 83 என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நாக அஸ்வின் இயக்கிய வைஜயந்தி மூவிஸ் பேனரால் தயாரிக்கப்பட்ட நாடகத் திரைப்படம் பிரபாஸ் 21. திரைப்பட நடிகர்கள் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Also Read | வேட்டையாடு விளையாடு 2 ரெடி : கௌதம் வாசுதேவ் மேனன்

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநதி’ படத்தை இயக்கிய நாக அஸ்வின் அடுத்ததாக ‘பாகுபலி’ புகழ் பிரபாஸை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

whopping amount to deepika padukone for pair-up with prabhas
whopping amount to deepika padukone for pair-up with prabhas

இத்திரைப்படத்தை தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க சுமார் 30 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு இந்திய நடிகைக்கு 30 கோடி சம்பளம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே
பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோனே

 

 

Exit mobile version