Live Cinema News

வேட்டையாடு விளையாடு 2 ரெடி : கௌதம் வாசுதேவ் மேனன்

Vettaiyaadu Vilaiyaadu part 2 is ready : Gautham Vasudev Menon
Vettaiyaadu Vilaiyaadu part 2 is ready : Gautham Vasudev Menon

கமலஹாசன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.

இத்திரைப்படத்தில் கமலஹாசன் ராகவன் என்ற கதாபாத்திரத்தில் மிக கம்பீரமாக நடித்திருப்பார் கமலுக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் கமாலினி முகர்ஜி என இரு கதாநாயகிகள் நடித்தார்கள். படத்தின் வில்லனாக டேனியல் பாலாஜி நடித்திருப்பார்.

2006 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் பல்வேறு தடைகளையும் கடந்து சாதனை படைத்தது சுமார் இத்திரைப்படம் சென்னையில் மட்டும் அதிக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் என்ற பெருமையும் பெற்றது.

இப்படத்தில் இடம்பெற்ற பாடலான பார்த்த முதல் நாளே என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க கௌதம் வாசுதேவ் மேனன் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Watch Also : Vettaiyaadu Vilaiyaadu 2 is Ready?

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் இந்த லாக் டவுனை பயன்படுத்தி கௌதம் வாசுதேவ மேனன் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்து விட்டாராம்.

இத்திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வைக்க கௌதம் மேனன் முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் படத்தைப் பார்த்த பல பிரபலங்கள் அவரது நடிப்பை பாராட்டிய நிலையில் கௌதம் மேனனும் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version