மது அருந்திவிட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் வனிதா – நாஞ்சில் விஜயன்

vanitha-vijayakumar-drunk-before-entering-big-boss-3-final-nanjil-vijayan
vanitha vijayakumar drunk before entering big boss 3 final – nanjil vijayan

விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா விஜயகுமார். தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன் பின்பு எந்த பட வாய்ப்பும் இல்லாமல் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா விஜயகுமார் அந்த நிகழ்ச்சி வெற்றியடைய தன்னால் முடிந்த பல விஷயங்களை செய்தார். தற்போது பீட்டர் பால் என்ற நபரை நான்காவது திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே தான் பீட்டர் பால் முன்னாள் மனைவி சூர்யா தேவி மற்றும் வனிதா இடையே அவ்வப்போது இணையதளங்களில் சண்டை நடைபெற்று வருகிறது.

இதில் ஒருபடி மேலே போய் வனிதா விஜயகுமார் காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனை வம்புக்கு இழுத்துள்ளார்.

Also See : ரஜினி, விஜய்யை வம்பிழுக்கும் மீரா மிதுன்

நாஞ்சில் விஜயன் தான் பீட்டர் பால் முன்னாள் மனைவி சூர்யா தேவியை பின்னாலிருந்து இயக்கி வருகிறார் என்று பேட்டி அளித்துள்ளார்.

வனிதாவின் இந்த பேட்டியை பற்றி நாஞ்சில் விஜயன் தனது பதிலை கூறியுள்ளார். அவர் என்ன சொன்னார் என்றால் எனக்கும் சூர்யா தேவிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நாங்கள் இருவரும் 7 வருடத்திற்கு முன்பு பழகிய நண்பர்கள். தற்போது எங்கள் இருவரிடமும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

Also Watch : விஜய்யுடன் மீண்டும் நடிக்க தயாராகும் அசின் 

இது போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தினால் நான் வனிதா அவர்களைப்பற்றிய தவறான விஷயங்களை வெளியே சொல்லி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார் நாஞ்சில் விஜயன். மேலும் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்வதற்கு முன்பு தண்ணி அடித்தார் என்றும் சிகரெட் பிடித்தார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் நாஞ்சில் விஜயன்.

 

 

Exit mobile version