Vaanam Kottattum Review | வானம் கொட்டட்டும்: திரை விமர்சனம்

Vaanam_Kottattum_Review

இன்றைய திரை விமர்சனம் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான வானம் கொட்டட்டும்

நடிகர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள்

நடிப்பு – சரத்குமார், ராதிகா சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் மடோனா செபாஸ்டியன்.
இயக்கம் – தனசேகரன்
இசை – சித் ஸ்ரீராம், கே கிருஷ்ணா குமார்
ஒளிப்பதிவு – ப்ரீதா ஜெயராமன்
தயாரிப்பு – மெட்ராஸ் டாக்கீஸ் மணிரத்தினம்
படம் வெளியான தேதி – 7 பிப்ரவரி 2020
நேரம் – 2 மணி 30 நிமிடம்
ரேட்டிங் – 3/5

கதை:

அவசரத்தில் ஒரு நபர் செய்யும் தவறு தன் குடும்பத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதே படத்தின் கதை.

வானம் கொட்டட்டும் படத்தின் நிறைகள்:

சரத்குமார், ராதிகா மற்றும் விக்ரம் பிரபு இவர்களை நோக்கி படத்தின் கதை விறுவிறுப்பாக நகர்கிறது. கணவனைப் போல மகனும் ஒரு கொலைகாரனாக மாறி விடக்கூடாது என்பதற்காக வேறு ஒரு ஊருக்கு அழைத்துச் செல்லும் சராசரி தாயாக நடித்திருக்கிறார் ராதிகா. படத்தில் எங்கு சிரிக்க வேண்டும் எங்க அழவேண்டும் என்று ஒவ்வொரு காட்சியிலும் நம் கண்களில் கண்ணீரை வர வைக்கிறார் ராதிகா. மகனாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு காசு காசு என்ற ஒரே எண்ணத்துடன் வாழும் நபராக சராசரி இளைஞனாக நடித்திருக்கிறார். குறிப்பாக காலை பால் வாங்க வேண்டுமென்றால் பைசாவை பார்த்தா பால் வாங்கப் போவேன் என்ற அவருடைய எண்ணம் திரையரங்கில் கைத்தட்டல் பெற வைக்கிறது. அழகான தங்கையாக வந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்து இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தந்தையை கொன்ற சரத்குமாரை பழிவாங்க துடிக்கும் நந்தாவின் நடிப்பு பாராட்டும் அளவிற்கு உள்ளது.

வானம் கொட்டட்டும் படத்தின் குறைகள்:

படத்தின் குறை என்று சொல்ல வேண்டுமென்றால் பாடல்கள் என்றே சொல்லலாம் ஆம் பாடல்கள் படத்தின் வேகத்தை வெகுவாக குறைக்கிறது. அதுமட்டுமின்றி மடோனா செபாஸ்டியன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் கதாபாத்திரத்தில் அழுத்தம் இல்லை. முதல் பாதி சற்று வேகமாக செல்கிறது இரண்டாம் பாதி மெதுவாக செல்கிறது.

The Review

வானம் கொட்டட்டும்

3 Score

படத்தைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் வானம் கொட்டட்டும் சாரல் மழை!

PROS

  • சரத்குமார்
  • ராதிகா
  • விக்ரம் பிரபு
  • படத்தின் ஒளிப்பதிவு
  • பின்னணி இசை

CONS

  • பாடல்கள்
  • நடிகர் நடிகைகளின் கதாபாத்திரம் அழுத்தம் இல்லை
  • படத்தின் திரைக்கதை

Review Breakdown

  • சரத்குமார்
  • ராதிகா
  • விக்ரம் பிரபு
  • பின்னணி இசை
  • ஒளிப்பதிவு
Exit mobile version