Top 10 highest grossing tamil movies 2019

Top 10 highest grossing tamil movies 2019
Top 10 highest grossing tamil movies 2019

2019-ஆம் ஆண்டு வெளியாகி அதிக வசூல் ஈட்டிய முதல் 10 திரைப்படங்களின் விவரங்களை இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம். இதில் நாங்கள் குறிப்பிட்டுள்ள திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்கள் மட்டுமே.

பிகில்

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் அட்லி, விஜய் கூட்டணியில் பிகில் உருவானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

படத்தில் விஜய் பாடிய என் நெஞ்சில் குடியிருக்கும் பாடல் விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த பிடித்த பாடலாக உருவானது.

bigil_156930609570

இதனிடையே பிகில் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. குறிப்பாக, பிகிலுடன் போட்டி போட்ட கைதி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும் பிகிலுக்கு வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனால் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே வசூலில் பிகில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் பிகில் சுமார் 145 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூலில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்த பிகில்.

விசுவாசம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான விசுவாசம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்பா, மகள் பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட விசுவாசம் படம் இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை குவித்த படமாக இருந்தது.

viswasam-000

ஆனால், கடைசியில் தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் விசுவாசத்தின் இந்த வசூல் சாதனையை முறியடித்தது அதுவரை முதலிடத்தில் விசுவாசம் படம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டை

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் பேட்டை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் வெளியானது.

பேட்டை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக திரிஷா மற்றும் சிம்ரன் நடித்திருந்தார்கள். வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார்கள்.

petta

இந்த ஆண்டு வெளியான படங்களில் வசூலில் முதல் 100 கோடியை தொட்ட படம் என்ற பெருமையை பேட்டை பெற்றுள்ளது.

காஞ்சனா-3

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா-3 திரைப்படம் இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் 100 கோடி வசூல் செய்த படங்களில் ஒன்றாக திகழ்கிறது. காஞ்சனா-3 படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஜோதிகா, ஓவியா நடித்து இருப்பார்.

_75498e32-62ab-11e9-a01d-452d93af50a1

விடுமுறை நாட்களில் காஞ்சனா-3 வெளியானதால் படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் கூட்டம் திரையரங்குக்கு படையெடுத்தார்கள். இதனால் காஞ்சனா-3 படம் வசூலில் மாபெரும் வெற்றி பெற்றது.

நேர்கொண்ட பார்வை

ஸ்ரீ தேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் நேர்கொண்ட பார்வை. தல கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கோட்பாட்டில் வாழும் ஒரு கடமை உணர்வு கொண்ட அரசு தரப்பு வக்கீலாக நடித்திருப்பார் அஜித்குமார்.

nerkondaparvai-000

தற்போது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை இந்த படத்தில் மிகவும் அழுத்தமாக தெளிவாக இயக்குநர் சொல்லியிருந்தார். இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்றாக நேர்கொண்டபார்வை திகழ்கிறது.

நம்ம வீட்டு பிள்ளை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நம்ம வீட்டு பிள்ளை படம் மிக பிரமாண்டமாக வெளியானது. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நம்ம வீட்டு பிள்ளை படம் பட்டிதொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்றது.

nammavettupillai-review-27919m6

குறிப்பாக படத்தில் சிவகார்த்திகேயன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு ரசிகர்களை மிகவும் பிடித்துப் போனது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் நம்ம வீட்டு பிள்ளை படம் தமிழகமெங்கும் சுமார் 60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தாண்டு வெளியான படங்களிலேயே 50 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களில் ஒன்றாக நம்மை வீட்டுப்பிள்ளை திகழ்கிறது.

அசுரன்

வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் என்றாலே அது வெற்றி கூட்டணி என்றே சொல்லலாம். இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், கலைப்புலி எஸ். தாணு பிரம்மாண்ட தயாரிப்பில் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் இந்த ஆண்டு வெளியான படம் அசுரன். அசுரன் படம் இந்த ஆண்டு வெளியான படங்களில் வசூலில் 10 இடங்களில் ஒன்றாக உள்ளது.

Asuran

அசுரன் படத்தின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் தனுஷ் அவர்களின் எளிமையான நடிப்பு அதுமட்டுமின்றி, படத்தில் முழுக்க முழுக்க விவசாயிகளின் வழிகளை பற்றிய கருத்துக்களை மையமாக கொண்டது என்பதால் படத்தின் வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

அசுரன் படம் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களிலேயே 100 கோடி வசூலை பெற்ற முதல் படமாகவும் திகழ்கிறது. இந்த ஆண்டு வெளியான படங்களில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற படம் என்றால் அது அசுரன் என்றும் கூறலாம்.

கைதி

தமிழ் சினிமாவில் முதல் முறையாக படத்தில் பாடல்கள் இல்லை கதாநாயகி என்று ஒருவர் இல்லை நகைச்சுவைக்கு ஆளில்லை இதுபோன்ற எந்த எந்த விஷயங்களும் இல்லாமல் ஒரு படம் பெரும் வெற்றியைப் பெற்றது என்றால் அது கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கைதி என்றே கூறலாம். மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் கைதி.

kaithi-00

படத்தின் கதை என்னவென்றால் ஒரு போலீஸ்காரர் போதைப் பொருட்களை கடத்தி வைத்திருக்கும் ஒரு கும்பலை பிடிக்க சிறையில் இருக்கும் ஒரு கைதியை பரோலில் எடுத்து வந்து அந்த கும்பலை பிடிப்பதே கதைக்களம்.

கார்த்தி கைதி ஆகவும் நரேன் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருப்பார்கள். முழுக்க முழுக்க ஆக்சன் மையமாக கொண்டு எடுக்கப்பட்ட கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், விஜயின் பிகில் படத்துடன் கைதி போட்டிபோட்டு வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது.

காப்பான்!

கே. வி. ஆனந்த், சூர்யா கூட்டணி என்றாலே அது வெற்றி கூட்டணி என்று சொல்லலாம். இவர்கள் கூட்டணியில் வெளியான அயன், மாற்றான் படங்கள் பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் மீண்டும் கே. வி. ஆனந்த், சூர்யாவும் இணைந்து பணிபுரிந்த படம் காப்பான்.

முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்லால் மற்றும் ஆர்யா நடித்திருந்தார்கள். சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்திருந்தார். காப்பான் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

kappaan-00

தற்போது, தமிழகத்தில் விவசாயிகள் படும் கொடுமைகளை அம்பலப்படுத்தும் படமாகவும் மேலும் இந்தியாவை தீவிரவாதிகள் எவ்வாறு தாக்குகிறார்கள் அதற்கு யார் யார் துணை புரிகிறார்கள் போன்ற சமூக அக்கறை கொண்ட படமாக எடுக்கப்பட்ட காப்பான் சூர்யாவுக்கு இந்த வருடத்தில் வெற்றிப்படமாக அமைந்தது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் படத்தை வாங்கி வெளியிட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் காப்பான் லாபகரமாக படமாக அமைந்துள்ளது என்றே கூறலாம்.

கோமாளி

வெல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த படம் கோமாளி. படத்தில் ரஜினியை விமர்சிக்கும் விதமாக வசனம் ஒன்று வைத்திருந்தார்கள் கோமாளி படக்குழுவினர்.

அந்த வசனத்திற்கு ரஜினி ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக அந்த வசனத்தை படத்திலிருந்து எடுத்தார்கள் கோமாளி பட குழுவினர்.

comali-000

ஆனால், ரஜினி ரசிகர்களின் இந்த எதிர்ப்பு கோமாளி படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை வரவேற்பை ஏற்படுத்தியது. இதன் விளைவு கோமாளி படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், உண்மையில் கோமாளி படத்தின் வெற்றிக்கு தயாரிப்பாளர் கணேஷ் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை சாரும் என்றே கூறலாம்.

Exit mobile version