இன்றைய சினிமா செய்திகள் (30-10-2019)

today-tamil-cinema-news-30-10-2019

இன்றைய சினிமா செய்திகள் (30-10-2019)

 

200 கோடி கிளப்பில் இணைந்த பிகில்!

தமிழ் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் தீபாவளியன்று மிக பிரம்மாண்டமாக வெளியானது பிகில். பிகில் படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தளபதி விஜய் பிகில் படத்தில் புட்பால் வீரராகவும், ஃபுட்பால் பெண்கள் அணிக்கு பயிற்சியாளராக மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். A R ரகுமான் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், பிகில் படத்தின் வசூல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளியன்று வெளியான பிகில் நேற்று வரை அதாவது திங்கள்கிழமை வரை உலகம் முழுவதும் சுமார் 200 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் சுமார் 100 லிருந்து 110 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 15 கோடியும் கேரளாவில் 16 கோடியும் கர்நாடகாவில் 13 கோடியும் வெளிநாடுகளில் சுமார் 65 கோடியும் என வெளியான அனைத்து இடங்களிலுமே வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது பிகில்.

தற்போது, வேலை நாட்கள் என்பதால் ரசிகர்களின் கூட்டம் குறைவாக உள்ளது என்று திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில். தற்போது, அனைத்து திரையரங்குகளிலும் 80% கூட்டம் வருவதாக செய்திகள் வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது பிகில் திரைப்படம் வசூலில் ஒரு புதிய உச்சத்தை அடையும் என்று தமிழ் திரை வல்லுநர்களும் கூறிவருகிறார்கள்.

Bigil-Crossed-200 Cr-Worldwide-in-Just-5-Days-00005

 

2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஆக்சன் ட்ரைலர்!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ஆக்சன். இப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.

ஆக்ஷன் படத்தில் விஷால் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. குறிப்பாக படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Action-Trailer-2.5M+Views-000523

கேப்மாரி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!

புரட்சி இயக்குனர் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் கேப்மாரி என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்து வருகிறார். இப்படம் முழுக்க நகைச்சுவை கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், கேப்மாரி படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. கேப்மாரி படம் எஸ் ஏ சந்திரசேகர்இன் 70 வது படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

CapMaari-Movie-First-Look-Poster-0000

 

ஆரவ் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது!

இயக்குனர் சரண் இயக்கத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் நடிக்கும் படம் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ். மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஆரவ் ரவுடியாக நடித்து வருகிறார். இவருடன் ராதிகா சரத்குமாரும் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்காக தயாராகி வருகிறது.

இந்நிலையில், இந்நிலையில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

MarketRajaMBBS-0000

Exit mobile version