Today Tamil Cinema News 30-05-2020

Today Tamil Cinema News 30-05-2020
Today Tamil Cinema News 30-05-2020

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் ரஜினியை முந்திய விஜய்!

திரையுலகில் எப்பொழுதுமே ஒரே ஒரு நடிகர் மட்டுமே உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். குறிப்பாக எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் இந்த இருவருமே தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை தற்போது தளபதி விஜய் பெற்றிருப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இதற்கு உதாரணமாக தற்போது விஜய் நடிக்கும் படங்கள் அனைத்துமே வசூலில் ஒரு புதிய உச்சத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் ரஜினியை வீழ்த்திய விஜய் என்ற ஹேஷ்டேக் மூலமாக ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

vijay
vijay

மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் பற்றிய அறிவிப்பு நாளை காலை வெளியாகிறது. இப்படத்தை பரசுராம் இயக்குகிறார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி.எம்.பி என்டர்டெயின்மென்ட் மற்றும் 14 ரீல்ஸ் பிளஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்நிலையில், நாளை காலை 9 மணிக்கு மகேஷ்பாபு நடிக்கும் 27-வது படத்தில் பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

#SSMB27
#SSMB27
Exit mobile version