இன்றைய சினிமா செய்திகள் (29-11-2019)

Today Tamil Cinema News 29-11-2019

தளபதி 64 சேட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் குடும்பம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படத்திற்கு விஜய் ரசிகர்கள் தளபதி64 என்று அழைத்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தளபதி64 படத்தை சன் டிவி ஒரு பெரும்தொகை கொடுத்து வாங்கியுள்ளது. தற்போது, இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் சன் குழுமம் அறிவித்துள்ளது.

டகால்டி டீசர் வெளியாகும் தேதி!

அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம் டகால்டி. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் டகால்டி திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. இந்நிலையில், டகால்டி படத்தின் டீசர் வருகின்ற டிசம்பர் மாதம் 1 தேதி வெளியாகிறது.

EKie10mU4AA7A2x

மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்திற்கு மூக்குத்தி அம்மன் என்று பெயர் வைத்துள்ளார்கள். மூக்குத்தி அம்மன் படத்தை ஆர் ஜே பாலாஜி, சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் திரில்லர் அமைந்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

EKiMcBLVUAAExb-

Exit mobile version