Today Tamil Cinema News 29-01-2020 | இன்றைய சினிமா செய்திகள்

page

Today Tamil Cinema News 29-01-2020

Today Tamil Cinema News 29-01-2020

21 ஆண்டுகளை நிறைவு செய்யும் துள்ளாத மனமும் துள்ளும்!

தமிழ் சினிமாவில் விஜய் இன்று தளபதியாக வலம் வர மிக முக்கியமான படமாக அமைந்த படம் தான் துள்ளாத மனமும் துள்ளும். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் இத்திரைப்படம் திரைக்கு வந்தது. தளபதி விஜய் இந்த படத்தில் கேபிள் ஆப்பரேட்டர் வேலை செய்து மாதம் மாதம் தனது தாய்க்கு தான் சம்பாதிக்கும் பணத்தை அனுப்பி வைக்கும் கேரக்டரில் நடித்திருப்பார்.

அங்கங்கே சில இடங்களில் நடக்கும் கச்சேரிகளில் கலந்து கொண்டு தனது பாட்டு திறனை வளர்க்கும் நபராக நடித்திருப்பார். படத்தில் தளபதிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் தளபதி விஜய்யால் சிம்ரனுக்கு கண் பார்வை போய்விடும் பின்பு சிம்ரனுக்கு பார்வை கிடைக்க தளபதி எடுக்கும் முயற்சியே படத்தின் மீதி கதை. படத்தை எஸ் எழில் இயக்கி இருப்பார். படத்தின் பலம் பாடல்கள் தான் இதற்கு மிக முக்கிய காரணம் எஸ் ஏ ராஜ்குமாரின் இசையும் வைரமுத்துவின் பாடல் வரிகள்தான்.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர் பி சவுத்ரி மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தார். இத்திரைப்படம் அந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்தது மட்டுமின்றி சுமார் 175 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வசூல் சாதனை படைத்த படமாக உள்ளது.

இந்நிலையில், இன்று துள்ளாத மனம் துள்ளும் படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பழைய நினைவுகளை பற்றி கூறி ஒரு புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. 21 ஆண்டு நிறைவை கொண்டாடும் துள்ளாத மனமும் துள்ளும் படக்குழுவுக்கு எங்களின் லைவ் சினிமா நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

EPcfZyVUwAYOdH_
Thullatha Manamum Thullum

ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுடன் இணைந்தார் அஜய் தேவ்கன்!

இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் இயக்குனர்களில் ஒருவர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ராஜமௌலி தனது அடுத்த படமான ஆர்.ஆர்.ஆர் படத்தின் வேலைகளைத் தொடங்கி விட்டார்.
படத்தின் கதை என்னவென்றால் சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் இவர்கள் இருவரும் பிரிட்டிஷ் ராஜ் மற்றும் ஹைதராபாத்தின் நிஜாமிற்கு எதிராக போராடிய சம்பவங்களே படத்தின் கதை முக்கிய கதாபாத்திரத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என் டி ஆர் மற்றும் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார்கள்.

தற்போது படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பில் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அஜய் தேவ்கன் கலந்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை படத்தின் இயக்குனர் ராஜமௌலி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

R.R.R film stars
R.R.R film stars

2 மில்லியன் பார்வையாளர்களை கடந்த எஃப். ஐ.ஆர் டீசர்!

ராட்சசன் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷால் எஃப். ஐ.ஆர் படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க இந்திய ராணுவத்தை மையமாக கொண்டு உருவாகும் உருவாகி வரும் இப்படத்தில் விஷ்ணு விஷால் சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகி சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

EPbkj4FVUAI6t5T
FIR Teaser 2 million cross
Exit mobile version