Today Tamil Cinema News 28-05-2020

Today Tamil Cinema News 28-05-2020
Today Tamil Cinema News 28-05-2020

பிகில் படத்தால் இத்தனை கோடி நஷ்டம் : அர்ச்சனா கல்பாத்தி?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் சுமார் 300 கோடி வரை வசூல் செய்தது என்று ஊடகங்களில் செய்தி வெளியாகின. இந்த வசூல் உண்மை தானா என்று இதுவரை தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், பிகில் படத்தால் ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு சுமார் 25 கோடி நஷ்டம் என்று அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

25 கோடி நஷ்டத்தில் பிகில் தயாரிப்பாளர்
25 கோடி நஷ்டத்தில் பிகில் தயாரிப்பாளர்

இந்த தகவலை தளபதி விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மறுத்து வருகிறார்கள். ஏனென்றால் தளபதி விஜய்யை மீண்டும் தங்களது தயாரிப்பில் நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் எடுக்கும் முயற்சி என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

பிங்க் அமீர்கான் போல் போஸ் கொடுத்த சந்தானம்!

சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் படம் டிக்கிலோனா. இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி டைரக்சன் செய்கிறார்.

இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்கள். மேலும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் நடிக்கிறார்.

டிக்கிலோனா படத்தை மிக பிரம்மாண்டமாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டாபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிட்டார்கள்.

நிர்வாணமாக போஸ் கொடுத்த சந்தானம்
நிர்வாணமாக போஸ் கொடுத்த சந்தானம்

அதே போல இன்றும் ஒரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். இந்த போஸ்டரில் சந்தானம் உடை எதுவும் அணியாமல் தோசை கல்லை கையில் வைத்துக்கொண்டு நிற்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த சந்தானம் ரசிகர்கள் அதிக லைக் மற்றும் ஷேர் செய்து வருகிறார்கள்.

சரித்திர படம் நிச்சயம் எடுப்பேன் ஹீரோ தளபதிதான் : சசிகுமார்!

சுப்ரமணியபுரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர் சுந்தரபாண்டி படத்தின் மூலமாக கதாநாயகனாக உயர்ந்தவர் சசிகுமார். சினிமா துறையை மிகவும் நேசிக்கும் இவர் நீண்ட காலமாக சரித்திர படத்தை இயக்க எனக்கு ஆசையாக இருக்கிறது என்று கூறிவந்தார்.

தற்போது அந்தப் படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் தான் நடிப்பார் என்றும் அதற்காக அனைத்து வேலைகளும் நான் ஈடுபட்டு வருவதாகவும் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் சசிகுமார். மேலும் சிறந்த தயாரிப்பாளர் கிடைத்தால் பாகுபலி விட சிறந்த திரைப்படமாக என்னால் இயக்க முடியும் என்று கூறிய சசிகுமார். சசிகுமார் இந்த பதிலை கேட்ட தளபதி ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

சரித்திரப் படத்தில் விஜய்
சரித்திரப் படத்தில் விஜய்
Exit mobile version