Today Tamil Cinema News 24-12-2019 | இன்றைய சினிமா செய்திகள்

Tamil Cinema News

திரையுலகில் 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விஜய் சேதுபதி!

தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு பிறகு பன்முகத்திறமை கொண்ட நடிகர் என்றால் அது நம் விஜய் சேதுபதிதான். புதுப்பேட்டை படத்தில் தனுஷுக்கு அருகில் இருக்கும் ஒரு நபராக நடித்து அதன்பின் தனது முயற்சியால் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து. பின்னர் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென நிரந்தர இடத்தை தக்க வைத்துள்ளார் விஜய் சேதுபதி.

9Yrs-Of-Vijay-Sethupathism-000
9 yrs of Vijay Sethupathi fan Poster

விஜய் சேதுபதியை நம்பி பணம் போட்டால் நிச்சயம் பணம் எடுக்க முடியும் என்ற அளவுக்கு இன்று விஜய் சேதுபதிக்கு மார்க்கெட் உள்ளது. தற்போது, விஜய் சேதுபதி ஹீரோ மட்டுமல்ல குணசித்திர நடிகர் மற்றும் சில நடிகர்களுக்கு வில்லன் என்ற அளவுக்கு தனது நடிப்புத் திறனை வளர்த்து வருகிறார். தற்போது தளபதி விஜய்க்கு வில்லனாக தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

10Yrs-Of-Vijay-Sethupathism-00

விஜய் சேதுபதியின் திரைப்பயணம் மென்மேலும் வளர எங்களின் லைவ் சினிமா நியூஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஹீரோ திருட்டு கதைதான் உறுதிப்படுத்திய பாக்யராஜ்!

hero movie is a theft story - Bhagyaraj
ஹீரோ திருட்டு கதைதான் உறுதிப்படுத்திய பாக்யராஜ்!

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி வெளியான படம் ஹீரோ. படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்நிலையில், ஹீரோ படத்தின் கதை தன்னுடையது என்று போஸ்கோ பிரபு படம் வெளியாவதற்கு முன்பே எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். தற்போது, எழுத்தாளர் சங்கத்திற்கு தலைவராக கே. பாக்யராஜ் இருப்பதால் இந்த பிரச்சினையை உடனே விசாரித்து ஒரு கடிதத்தை மித்ரனுக்கு அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்தில் ஹீரோ படத்தின் கதை போஸ்கோ பிரபு உடையது தான் நீங்கள் அந்த கதைக்கான இழப்பை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று பாக்யராஜ் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார். இதை கண்டுகொள்ளாத ஹீரோ படத்தின் இயக்குனர் மித்திரன் படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

தற்போது இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் போஸ்கோ பிரபு இந்த கடிதத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை நீதிமன்றம் இதை விசாரித்தால் நிச்சயம் போஸ்கோ பிரபுவுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும் என்பது உறுதி.

தர்பார் வசூலுக்கு வழிவிடும் தனுஷ்!

dhanush favour to darbar
தர்பார் வசூலுக்கு வழிவிடும் தனுஷ்!

ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு முன்பே அதாவது ஜனவரி மாதம் 9-ஆம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே படத்தின் டீசர் மற்றும் இசை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் ரஜினி ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது தர்பார். இதனிடையே, தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. பட்டாஸ் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ள படத்தயாரிப்பு நிறுவனம் இந்த படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

ஆனால் தர்பார் வெளியான ஒரு வாரம் கழித்து ஜனவரி 16-ம் தேதி தான் பட்டாஸ் வெளியாக உள்ளது. இந்த ஒரு வாரம் கேப் தர்பார் வசூலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெளிவாக தெரிகிறது.

Exit mobile version