Today Tamil Cinema News 23-03-2020

Today Tamil Cinema News 23-03-2020

Today Tamil Cinema News 23-03-2020

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் பெண் இயக்குனர்!

தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்று தமிழ்த் திரையுலகில் பெரும் போட்டி நடைபெற்று வந்தது. தற்போது, அந்த போட்டியில் சுதா கொங்கரா வெற்றிபெற்றுள்ளார்.

அஜித்தின் அடுத்த படத்தை இவர்தான் இயக்க உள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சூர்யாவை வைத்து சூரரைப்போற்று என்ற படத்தை இயக்கி வரும் சுதா கொங்கரா அந்த படத்தின் வேலைகள் முடிந்த பிறகு அஜித் படத்தை துவங்குவார் என்று தெரிகிறது.

thala61
thala61

குட்டி ஸ்டோரி பாடலில் ‘கொரோனா’ பத்தி சொன்ன தளபதி!

பிகில் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், படத்தில் தளபதி விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில், குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோவில் ‘கொரோனா’ என்ற வார்த்தை வருவதை சில ரசிகர்கள் கண்டுபிடித்து. ஒரு மாதத்திற்கு பின் வரப்போகும் நோயை தளபதி இப்பொழுதே கண்டுபிடித்து விட்டாரே என்று தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.

corona-reference-in-master-kutty-story-song
corona-reference-in-master-kutty-story-song

மாஸ்டர் படத்தில் இளமை தோற்றத்தில் தளபதி விஜய்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அந்த கண்ண பார்த்தா என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் தளபதி விஜய் மிகவும் இளமை தோற்றத்தில் காணப்படுகிறார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தளபதி ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள்.

அந்த புகைப்படங்கள் இதோ….

Andha-Kanna-Paathaakaa-song-photo
Andha-Kanna-Paathaakaa-song-photo
Andha-Kanna-Paathaakaa-song-still
Andha-Kanna-Paathaakaa-song-still
Andha-Kanna-Paathaakaa-song-vijay-still
Andha-Kanna-Paathaakaa-song-vijay-still
Exit mobile version