
க/பெ ரணசிங்கம் படத்தின் டீசர் அப்டேட்!
அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ‘பூ’ ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ‘க/பெ. ரணசிங்கம்’ படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரை காண விஜய்சேதுபதி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.
ஒருவழியாக வெளியாகும் இடம் பொருள் ஏவல்!
லிங்குசாமி தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் இடம் பொருள் ஏவல். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2013-ம் ஆண்டு தொடங்கி 2014-ம் ஆண்டு முடிவடைந்தது.
2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பாடல்கள் வெளிவந்தன. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக திரைக்கு வராமல் இருந்தது.
இந்நிலையில் கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார் லிங்குசாமி.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் சீனுராமசாமி, “சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் “கிருஷ்ணா கிருஷ்ணா” எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல்.
இது திரைப்படந்தான் ஆனால் எனக்கு பிள்ளை, இயக்குநர் திரு,லிங்குசாமிக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தேவி திரையரங்கம்!
சென்னை என்றால் நம் நினைவில் வரும் ஒரு சில புராதன சின்னங்களில் 1 தேவி திரையரங்கம். ஆம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களை உருவாக்கிய பெருமையை இந்த திரையரங்கத்தை வந்து சாரும் என்றே சொல்லலாம்.
எம்.ஜி.ஆர் தொடங்கி இன்று சிவகார்த்திகேயன் வரை பல நடிகர்களின் படங்களின் முதல் நாள் காட்சி இந்த திரையரங்கில் பார்த்தால்தான் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று பல ரசிகர்கள் இங்கு வந்து செல்வது வாடிக்கை.
மேலும் தேவி தியேட்டரில் ஒரு சிறப்புமிக்க விஷயம் என்னவென்றால் இந்த திரையரங்கில் தான் சுமார் 1000 நபர்கள் அமர்ந்து பார்க்கும் இருக்கை கொண்ட பெரிய திரையரங்கமாக திகழ்கிறது.
இந்நிலையில், தேவி திரையரங்கம் துவங்கி இன்றுடன் 49 ஆண்டுகள் முடிவடைந்து 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள். தற்போது தேவி திரையரங்கம் கடந்துவந்த பாதையை ஒரு வீடியோ உடன் நாம் பார்க்கலாம்.