இன்றைய சினிமா செய்திகள் (21-11-2019)

today-tamil-cinema-news-21-11-2019

Today Tamil Cinema News 21-11-2019

சென்னையில் அதிக வசூல் செய்த படங்களில் முதல் இடத்தில் பிகில்!

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு மிக பிரம்மாண்டமாக வெளியானது பிகில். ரசிகர்களிடம் கலவையான விமர்சனம் பெற்றாலும் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 25 நாட்கள் முடிவில் பிகில் உலகம் முழுவதும் சுமார் 300 கோடி வசூல் செய்து உள்ளது. இதில், சென்னையில் மட்டும் சுமார் 15 கோடி வசூல் செய்து வசூலில் முதலிடத்தில் உள்ளது

ஹீரோ படத்தின் புதிய அப்டேட்!

இரும்புத்திரை இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ஹீரோ. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடித்துவருகிறார். ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக அர்ஜுன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஹீரோ படத்தின் பாடல்கள் அனைத்தும் டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி வெளியாகிறது. ஹீரோ படத்தின் டிரைலர் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வெளியாகிறது. ஹீரோ படத்தின் டப்பிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தை சொன்ன தேதியில் அதாவது டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி நிச்சயம் ஹீரோ திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Hero-From-Dec20-000

50-ஆவது நாளில் அசுரன்!

நடிகர் தனுஷ் அவர்களின் வெறித்தனமான நடிப்பில் வெளியாகி மிகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது அசுரன் திரைப்படம்.

இந்நிலையில், இப்படம் நூறு கோடி வசூலை வாரி குவித்துள்ளது. மேலும் சிறப்பம்சமாக முதன் முறையாக நடிகர் தனுஷ் அவர்கள் நடித்த திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூல் ஆகியுள்ளது. இந்நிலையில், அசுரன் வெற்றிகரமாக 50 நாளை எட்டியுள்ளது.

asuran-000

Exit mobile version