Today Tamil Cinema News 21-05-2020

Today Tamil Cinema News 21-05-2020
Today Tamil Cinema News 21-05-2020

வாத்தி ஸ்டெப் விஜயின் பழைய பாடலின் காப்பியா!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடல் மிகவும் பிரபலமாகி வருகிறது.

இதில் தளபதி விஜய் ஒரு ஸ்டெப் போட்டிருப்பார் தற்போது அந்த ஸ்டெப் விஜயின் விஷ்ணு படத்தில் இடம்பெறும் பாடலான சிங்கார பூவுக்கு மை கொண்டு வா நந்தலாலா என்ற பாடலில் விஜய் ஏற்கனவே ஆடி இருப்பதாக அவரது ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் வீடியோவுடன் ட்ரண்ட் செய்து வருகிறார்கள்.

மிரளவைக்கும் சிக்ஸ் பேக்கில் பரத்!

பாய்ஸ் படத்தில் 5 ஹீரோக்களில் ஒருவராக நடித்து பிரபலமானவர் பரத். பின் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் காதல் படத்தில் மூலமாக ஹீரோவாக உயர்ந்தார் பரத்.

அதையடுத்து செல்லமே, வெயில், பட்டியல், எம் மகன், கண்டேன் காதலை, பழனி என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்தார். கடைசியாக பொட்டு என்ற பேய் படத்திலும் நடித்தார்.

தற்போது, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தை பயன்படுத்தும் விதமாக பரத் தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பரத்தின் இந்த உடல்வாகை பார்த்த அவரது ரசிகர்கள் மெய் மறந்து ரசித்து வருகிறார்கள்.

சிக்ஸ் பேக்கில் பரத்
சிக்ஸ் பேக்கில் பரத்

ராணாவுக்கு நிச்சயதார்த்தம்!

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ராணா. அதன்பின்பு அவர் நடித்து வரும் படங்கள் அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்து வருகிறது. இந்நிலையில், ராணாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்தது தற்போது தனது துணையுடன் ராணா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராணா டகுபதி மிஹீகாபஜாஜ்
ராணா டகுபதி மிஹீகாபஜாஜ்
Exit mobile version